ஹஜ்ரத் க்வாஜா முயீனுத்தீன் க்ஷிஷ்தி அஜ்மீரி (ரலி)
இவ்வுலகில் தன்னலமற்று வாழ்ந்தால் மட்டுமே ஓர் முரீது (ஆன்மீக சீடர்) ‘தர்வேஷ்’ (பரிசுத்த துறவி) என்றழைக்கப்பட தகுதியுடையவராக ஆவார்
நாம் தாகத்தில் ஓர் நதியை கண்டடையும்போது அது தன் நீரை அளித்து நம் தாகத்தை தணிக்கின்றது. மாறாக தாகித்து வருபவன் நல்லவனா – கெட்டவனா, நெருக்கமானவனா அல்லது அந்நியனா என்ற பாகுபாடுகளை அது பார்ப்பதில்லை.
இறைநேசர்களும் நதியைப்போன்ற பெருந்தன்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்
A friend of God is generous like a river. We all get water from the river to quench our thirst. It does not discriminate whether we are good or bad or whether we are a relation or a stranger.
இறைநேசப் பாதையில் பயணிக்கும் மனிதன் எந்த ஒரு ஆன்மாவையும் அலட்சியம் செய்தல் கூடாது. சக ஆன்மாக்களை கீழாக கருதுவது மிகப்பெரும் பாவம். ஏனெனில் ‘உங்கள் அனைவரையும் நாம் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தோம்’ என்று இறைவன் தன் திருமறையில் கூறுவதை சிந்தியுங்கள்