மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்)
‘என் இறைவா! உன்னை நான் அறிந்து கொள்ளும் முன் என்னை மரணிக்கச் செய்து விடாதே’ என்று ஆண்டவனிடம் வேண்டினேன். அதற்கு ‘என்னை அறிந்து கொண்டவன் என்றும் மரணிப்பதில்லை’ என்று இறைவனிடமிருந்து பதில் வந்தது
இறைவன் தன்னுடையதன்றி வேறு ஜீவிதம் இருப்பது பற்றி பொறாமை உடையவனாவான். ஏனெனில் யதார்த்தத்தில் தெய்வ உள்ளமை தான் ஜீவிதம் உள்ளது; யாவையும் கடந்தது. தன் காதலர்கள் தமது இச்சையின் முழு இலக்காகவும் தன்னையே கொள்ள வேண்டுமென்றும், தன்னிலேயே தங்களை அவர்கள் இழக்க வேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறான்
பிறவியிலேயே செவிடூமையானவன் பேசுவது எப்படி? அதுபோல் ஆத்மீக விஷயத்தில் செவிடாக படைக்கப்பட்டவர்கள் நபிமார்களாலும் மெய்ஞானிகளாலும் போதிக்கப்பட்ட உண்மைகளைத் தங்கள் உள்ளதால் புரிந்து கொள்ளவோ வெளியிடவோ முடியாதவர்களாவர்
இறைவா, நான் என்றென்றும் உன்னுடையவன். என்னை என்னிடம் மீண்டும் தந்துவிடாதே
இறைவனுடையவும் அவனது நேசர்களுடையவும் நல்லருளை பெறாதவரை ஒருவன் எத்தனைதான் தெய்வீக தன்மை உடையவனாய் இருப்பினும் அவன் செயல்களின் பட்டியல் இருண்டதாகவே இருக்கும்