ஹஜ்ரத் கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை
முஹ்யித்தீனாகிய நான் …
என் முரீதுகள் (சீடர்கள்) அஞ்சுபவற்றிலிருந்து அவர்களை பாதுகாத்து சகல தீங்குகள், சோதனைகளை விட்டும் அவர்களை விடுவிப்பேன்

என் முரீதே! வரம்பு மீறாதே! வழிதவறாதே!
மறுமை நாளில் நன்மை தீமைகள் நிறுக்கப்படும் தராசின் முன் நீ நிற்கும் போது உன் அருகில் நான் இருப்பேன்!
இணை வைப்பது என்பது விக்கிரக வணக்கம் மட்டுமன்று; உடல் இச்சையின் படி நடப்பதும் இம்மைக்குரிய எதனையும் இறைவனோடு சேர்த்து பேசுதலும் கூட இணை வைப்பதுதான்.
ஏனெனில் இறைவனை அன்றி வேறெதுவும் இறைவன் ஆகாது.
அன்பர்களே, உங்களிடம் செல்வனும் ஏழையும் வரும்போது அவர்களின் வருகையில் நீங்கள் வேற்றுமை காணக்கூடாது. கண்டால் ஒருக்காலும் ஈடேற்றமடைய மாட்டீர்கள்
சாதாரண மக்கள் அழிந்தபின் உயிர்ப்பிக்கப்படும் அனுபவத்தைக் கியாம(உலக இறுதி) நாளில் மட்டுமே அடைவார்கள். இறைநேசர்களோ, அவனுடைய ஒரு நோக்கால் இறந்து, மறுநோக்கால் உயிர்த்தெழும் அனுபவத்தை இப்பிரபஞ்ச வாழ்விலேயே அடையப்பெறுவார்கள்.