நாகூர் பாதுஷா நாயகம்


கருணைக்கடல் காருண்ய ஜோதி தெற்கிழக்காசியாவின் ஞானதீபம்
நாகூர் ஹஸ்ரத் சையது அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் உபதேசங்கள்.
இறைவனைப் பற்றிய அறிவு அல்லது ஞானம் எங்கு கிடைக்கும், அதை எப்படி அடைவது என்ற கவலை ஒருவனுக்கு ஏற்படுமேயானால், அவன் கவலையின் அளவுக்கேற்ப தேட்டமும் அவனது தேட்டத்தின் அளவுக்கேற்ப அவனுக்கு ஞானமும் கிடைக்கிறது
குழப்பவாதிகளே ! உங்களது குழப்பங்களை வெளியில் வைத்துவிட்டு என்னிடத்தில் வாருங்கள். மனிதர்களை புனிதர்களாக மாற்றும் ‘கீமியா’ என்னும் ரசவாத வித்தை என்னிடமுள்ளது. அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நீங்கள் ஜெயமடையும் பொருட்டு என் வார்த்தைகளை நம்புங்கள்.
இறைநேசம் என்பது ஆண்டவனைப் பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டதாகும். எனவேதான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ‘சீனாவில் இருப்பினும் அறிவைத் தேடி அடைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவைப் பொறுத்தது விசுவாசம். விசுவாசத்தைப் பொறுத்ததே நேசம்.
நல்லறிவாளர்களே! சிந்தித்துப் பாருங்கள்!
உங்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை அணுகுங்கள். ஆண்டவனை அணுகுவதற்கு சுலபமான பாதை அவனை அடைந்தவர்களின் சகவாசத்தை நீங்கள் நாடித் தேடுவது கொண்டுதான்!
மெய்யன்பர்களே ! அல்லாஹ்வின் நல்லடியார்களான இறைநேசர்களின் சகவாசத்தால் உங்களுக்கு ஏற்படும் பலன் இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறமுடியாது.
ஹஜ்ரத் ஸாலிஹ் (அலை) அவர்கள்
‘ எவரொருவர் அல்லாஹ்வின் நல்லடியாரை நினைவு கூறுகிறாரோ அவர் மீது இறையருள் பொழியப்படுகிறது! உங்களுடைய முடிவு அவர்களுடைய முடிவைப்போல் ஆவதற்காக ஆண்டவனுடைய நல்லடியார்களை நினைவு கூர்ந்திடுங்கள்’
என்றும் கூறியுள்ளார்கள்.
Assalamu alaikum…Post more quotes brother
Alaikum Salam, Insha Allah will add more quotes. Thanks for your suggestion.