கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்கள் கூறுகிறார்கள்
அன்பர்களே,
மெய்ப்பொருளான இறைவனின் சந்திப்பு ஏற்படாதவரை,
உங்கள் பாதங்கள் அவனுடைய திக்கில் ஸ்திரம் பெறாதவரை,
அவன் அருகே உயர்வதர்குரிய சிறகுகளை பெற்றுக்கொள்ளாதவரை
சதா பயந்தவர்களாய் இருங்கள்.
திருப்தியும் நிம்மதியுமடைந்து விடாதீர்கள்.
அவனே சிறகுகளை அளிக்கும் நிலை வரும்போதுதான் நிம்மதி என்பது பொருந்தும். அவன் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்போது அவன் புறமிருந்து பலவித நன்மைகளை காணலாம். அவன் புறமிருந்து ஆதரவு வந்ததும் ஆத்ம நிம்மதி தானாகவே உண்டாகிவிடும்.
ஏனெனில், அளிப்பதை மறுபடி அவன் பறிக்கமாட்டான்.
அவனுடைய அங்கீகாரத்திற்கு உரியவர்களாக நீங்கள் ஆனதும் அவனுடைய சமீபத்துவத்தை அடையப்பெருவீர்கள்.
இந்நிலையில் பயமேற்படினும், பயத்தை போக்கிவிடும் உதிப்பை அவன் தந்தருளுவான் . உங்கள் வாழ்வு தெய்வ சம்பந்தத்துடன் சீர்பெற்றதாகிடும்.