முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)

  • அவதரித்த நாள், கி.பி 1078 – ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஹிஜ்ரி 471-ம் ஆண்டு ரமலான் பிறை முதல் நாள் திங்கட்கிழமை அதிகாலை.
  • அவதரித்த இடம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே பாரசிகமொழி வழங்கிய தபரிஸ்தான் மாநிலத்தில் ஜீலான் எனும் புனித நகரின் புரநகர்ப் பகுதியான நீஃப் என்ற திருத்தலம்.
  • குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து முடித்த போது வயது 7.
  • உயர் கல்விக்காக ஜுலான் நகரை விட்டு பக்தாத் மாநகருக்கு புறப்பட்டபோது வயது 18.
  • பக்தாத் மாநகரில் ஏழு ஆண்டுகாலக் கல்வியை முடித்த போது வயது 25.
  • ஆன்மிக சாதனைகள் : பக்தாத் நகரையடுத்திருந்த கர்க் கானங்களில் 11 ஆண்டுகாலமும், கானகத்தின் மத்தியில் இருந்த புருஜுல் அஜமி கோட்டையில் 11 ஆண்டு காலமும், ஆக 22 ஆண்டு காலம் கடினமான தவயோக சாதனைகளைப் புரிந்தார்கள்.
  • கால வெள்ளத்தின் அலைக்கழிப்பால் கம்பீரம் குறைந்து நலிவுற்றிருந்த தீன் எனும் ஆன்மிக ஞான மார்க்கத்திற்கு புத்துயிர் ஊட்டி தீனுக்கு உயிருட்டிய முஹ்யித்தீன் எனும் காரணத் திருநாமத்தை அடைந்த போது வயது 50.
  • 40ஆண்டுகால நெடும் நோன்பையும், 22 ஆண்டு கால கடும் தவத்தையும் 50-வது வயதில் முடித்தது கி.பி.1127-ம் ஆண்டு (ஹிஜ்ரி521) தன்னையறிந்து தலைமை நிலைக்கு மீண்டு, பூரணத்துவத்தின் பொலிவுடன் உலகியல் பக்கம் திரும்பியபோது வயது 51.
  • கதமி ஹாதிஹி அலா ரகபத்தி குல்லிவலியுல்லாஹ்

என் இரு பாதங்கள் இறை தோழர்கள், (வலிமார்கள்) அனைவர் தோள்கள் மீதும் இருக்கின்றது.

என்று முஹ்யித்தீன் பெருமான் பிரகடனப்படுத்தியது ஹிஜ்ரி 561, கி.பி.1169-ம் ஆண்டு.

local_offerevent_note July 28, 2021

account_box admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *