நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடம் நற்குணம் இருக்குமாயின் அவனிடம் கீழ்க்கண்ட பண்புகள் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
- மிகுதியாக வெட்கப்படுதல்,
- பிறருக்குத் தொல்லை கொடாதிருத்தல்,
- உண்மை பேசுதல்,அதிகம் பேசாதிருத்தல்,
- மிகுதியான நற்செயல்களும்-வணக்கவழிபாடுகளும் செய்தல்,
- பிறருடன் (மக்களுடன்) சேர்ந்து வாழ்தல்,
- நல்லவனாக இருத்தல்,
- கண்ணியமாக இருத்தல்,
- பொறுமையுடன் இருத்தல்,
- நன்றியுணர்வுடன் இருத்தல்,
- திருப்தியுடையவனாயிருத்தல்,
- ஒழுக்கத்துடன் இருத்தல்,
- நண்பனாக இருத்தல்,
- பிறரை நேசிக்கும் தன்மை,
- அல்லாஹ்வின் சினத்திற்கு ஆளாகாதிருத்தல்,
- பிறரை ஏசாதிருத்தல்,
- கஞ்சத்தனம், புறம்பேசல், குறைகூறல், தீவிர வாதம் இவைகளை விட்டும் நீங்கியிருத்தல்,
- முகமலர்ச்சியுடன் இருத்தல்,
- சகிப்புத் தன்மை,
- தேவைகளைக் குறைத்துக் கொள்ளுதல்.
இவைகளே நற்குணத்தின் அடையாளங்களாகும்.
மேற்கூறிய அனைத்து குணங்களும் சம்பூர்ண சாந்தி நபி(ஸல்) அவர்களிடம் நிறைந்திருந்தன,
‘இன்னும் நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்’
என்று இறைவன் தன் திருமறையிலே அருளியுள்ளான்.
நபிவழிபேன நம்மவர் அனைவர்க்கும் நாயனருள் செய்வானாக!