கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியதாவது…
என் சங்கநாதத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து நடந்தால் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்.
வேர் பலப்பட்டால்தான் மரம் காய்க்கும். நானோ என் ஷைகின் (குருவின்) கடும் சொற்களை செவிடன், ஊமை போன்று மௌனமாய் ஏற்றுக் கொண்டேன்.
அவரால் எனக்கு சம்பவித்த ஆபத்துகளைக் கூட பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டு அவரால் அளிக்கப்பெற்ற ஞானத்தால் என்னை துாய்மைப்படுத்திக்கொண்டேன்.
நீயோ ஷைகின்(குருவின்) சிட்சையால் பயனடைய விரும்புகிறாய்.
ஆனால், அவர் சொற்களை பொறுமையோடு செவிமடுப்பதில்லை.
நன்மையோ, தீமையோ எதுவும் இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்ற உள்ள உறுதியோடு ஷைகின்(குருவின்) போதனையை ஏற்றுக் கொள்ளாதவரை உனக்கு வெற்றியில்லை.
உன் லோபத்தனமும் அசட்டையுமே உன் தோல்விக்கு பொறுப்பே தவிர உன் குரு அல்ல. கண்ணை மூடிக் கொண்டு ஷைகின்(குருவின்) சொல்படி நட முக்தி மார்க்கம் கிட்டும்.
